மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு...! - தெரிந்துகொள்வோம்


நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள்.

தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம். இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்து வந்த போதிலும், இப்போதுதான் அது பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணர் ஜோயல் மெல்டன்.

மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக தங்களது உடலை தானமாகத் தந்த 41 பேரின் உடலிலிருந்து முழங்கால்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தபோது இதைக் கண்டறிந்துள்ளனர். எல்லோரது முழங்கால் எலும்புகளிலும் இந்த தசைநார்கள் இருப்பதையும், அலை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதையும் விஞ்ஞானிகள் பார்த்துள்ளார்கள்.

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து.

கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களே ஏராளமான முழங்கால் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதும் க்ளஸ்ஸு மற்றும் ஜோஹன் பெல்லொமன்ஸ் ஆகியோரின் கருத்து.

கால்களில் ஏற்படும் வலி மற்றும் உபாதைகள் தொடர்பான சிகிச்சைகளுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறித்து தீவிர ஆராய்ச்சி நடக்கிறது.
Read More

நடிகர் விஜய்யும் குமுதமும் சேர்ந்து நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகம் அம்பலம் (ஆதாரம் இணைப்பு)



தமிழ் வார பத்திரிக்கை இதழான குமுதம் சென்ற வாரம் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் வேளையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.

குமுதத்தின் இந்த தீடீர் கருத்துக்கணிப்பிற்கு காரணம் என்ன என்பது சில நாட்கள் வரை தெரியாமல் இருந்து வந்தது. பின்னர் பணத்திற்காக தான் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர் என திரையுலக பிரபலங்கள் பலரும் கிசுகிசுத்தனர்.

தற்பொழுது இவர்கள் விஜய்யும் குமுதமும் சேர்ந்துதான் அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர் என்றும் அதில் தனக்கு தானே பட்டதையும் கொடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் என்றும் கூறுகின்றனர்.

இந்த கருத்துக்கணிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் நடிகர் அஜித் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். கடைசி நாள் வரை நடிகர் அஜித் மட்டுமே அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துகணிப்பில் முன்னிலை வகித்துள்ளார். இதற்கான ஆதாரத்தை கருத்துக்கணிப்பு நடத்திய நபர்களில் முக்கியமான ஒருவர் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்தின் வெற்றி மறைக்கப்பட்டு நடிகர் விஜய் தான் வெற்றி பெற்றார் என அறிவித்துள்ளனர். இது எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய செயல் என்பதையும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள் விஜய் “ரசிகர்கள் என்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததற்கு நன்றி, மக்களின் இந்த முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுகொள்கிறேன்” என குமுதம் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பால் கொந்தளித்து போய் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த விஷயத்தை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இது குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Read More

இட்லி சாப்பிடுங்கள் - சாப்பிட்டால்...? - இதப்படிங்க...

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?


என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள், இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,முருங்கைக்காய்  சாம்பார் நல்லது.  அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை.  இல்லையெனில் புதினா, கொத்தமல்லி  போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்க்கு நல்லது.

எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.
Read More

மருந்தில்லா மருத்துவம் - உங்களுக்காக...!


* தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

* சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

* வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

* தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

* அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

* சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

* அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.

* கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

* மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

* நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.

* நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

* மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

* கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

* முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

* உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.

* எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

* குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.
Read More

வல்லாரையின் பயன்கள் இவ்வளவா...? இதப்படிங்க...!



வல்லாரை

உடலுக்கு வன்மையையும், அறிவையும் அள்ளித் தரும் மூலிகைதான் வல்லாரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.

பொதுவாக வல்லாரை உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும். மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். இம் மூலிகையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என முச்சுவையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வல்லாரை யோசன வல்லி, பிண்டீரி, சண்டசி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

எல்லா வகையான சுரங்களையும் நெருங்க விடாது. சூட்டைத் தணிக்கும். சிரசின் உஷ்ணத்தைக் குறைத்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்கு தினமும் 10 வல்லாரை யிலையை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்படும். தொண்டைக் கம்மல் குறையும்.

வல்லாரையின் பயன்கள்

• ஞாபக சக்தியை தூண்டும் இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

• இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

• வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.

• ஈளை, இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டை போக்கும். காச நோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

• கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கும்.

• நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரை உண்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கி வயிற்றுப்புண், குடற்புண்ணை ஆற்றுகிறது.

• யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெய் செய்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.
Read More