முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்நுட்பம் உங்களுக்கு வேணுமா..?
தென் கொரியாவானது முழுமையான திரைப்படமொன்றை ஒரு செக்கனில்
பதிவிறக்கம் செய்யக்கூடிய 5 ஆம் தலமுறை கையடக்கத்தொலைபேசி
இணையத்தள சேவையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி ’5 ஜி’ என்ற ஐந்தாம் தலைமுறை கையடக்கத்
தொலைபேசி
சேவைகளில் 900 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முதலீடு
செய்துள்ளது.
இந்த சேவையை பரீட்சார்த்தமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும்
அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக ரீதியாக செயற்படுத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்பமானது ஒரு செக்கனில் 800 மெகா பைட் அளவான
திரைப்பட கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்பாட்டாளருக்கு
அனுமதிக்கிறது.
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)


No comments :
Post a Comment